பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா உடல் நலக்குறைவால் காலமானார்

அதிக படங்களை இயக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த தெலுங்குப்பட பெண் இயக்குனரும், பழம்பெரும் நடிகையுமான விஜய நிர்மலா உடல் நலக்குறைவால் காலமானார்.

தமிழில் எங்கள் வீட்டு பெண், சித்தி, சோப்பு சீப்பு கண்ணாடி, என் அண்ணன், ஞான ஒளி உள்பட பல படங்களில் நடித்த விஜய நிர்மலா, பணமா பாசமா படத்தில் வரும் எலந்தப்பழம் பாடல் மூலம் பிரபலமடைந்தவர் ஆவார். சிவாஜி, எம்.ஜி.ஆர், முத்துராமன் என அப்போதைய முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார். சுமார் 200 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடித்துள்ள விஜயநிர்மலா, 44 திரைப்படங்களை இயக்கிய பெருமைக்குரியவர். அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள விஜயநிர்மலா, வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் முன்னணி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version