பழம்பெரும் நடிகரும், பின்னணிப் பாடகருமான ஏ.எல்.ராகவன் மாரடைப்பால் தனது 87வது வயதில் காலமானார். 1947-ஆம் ஆண்டில் வெளிவந்த கிருஷ்ண விஜயம் என்ற படத்தின் மூலம் நடிகராக திரைத்துறைக்குள் நுழைந்த ஏ.எல்.ராகவன், 1950-ல் வெளிவந்த விஜயகுமாரி என்ற படத்தின்
மூலம் பாடகராக அறிமுகமாகினார். 1980 வரை தமிழ்த் திரைப்படங்களில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் ஆகியோரின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். இவரது மனைவி எம்.என்.ராஜம் பிரபல நடிகை ஆவார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என திரைத்துறையில் வலம் வந்த ஏ.எல்.ராகவன், உடல்நிலை சரியில்லாததால், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மருத்துவமனையிலேயே காலமானார். ஏ.எல்.ராகவனின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.