சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தில், கட்டிய கணவனை விட்டு விட்டு டிக் டாக்கில் பழக்கமான உயிர்தோழியுடன் பெண் ஒருவர் ஓட்டம் பிடித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தில் வசிக்கும் அருள் ஜெயராணி என்பவர் இளைய மகள் வினிதா இவருக்கும் சானா ஊரணியில் ஆரோக்கியலியோ என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. வினிதாவும் ஆரோக்கியலியோ வும் தனிவீடு எடுத்து காளையார்கோவிலில் வசித்து வந்தனர். அதன் பின் திருமணம் ஆன 45 நாட்களில் ஆரோக்கிய லியோ சிங்கப்பூர் சென்றுவிட்டர். இதற்க்கு பின்பு தான் வினிதாவின் Tik.TOK பயணம் ஆரம்பித்தது. இப்படி டிக் டாக் செய்யும் போது திருவாருரை சேர்ந்த அபி என்பவருடன் நெருக்கமாகியுள்ளார் வினிதா. இதனை TIK Tok பதிவுகளில் பார்த்த கணவன் ஆரோகியலியோ தனது மனைவியை, போன் மூலம் கண்டித்துள்ளார். ஆனால் அது பற்றி எல்லாம் கவலை படாத வினிதா தனது உயிர்தோழியான அபியின் படத்தை தனது கையில் பச்சை டாட்டூ வாக வரைந்து உள்ளதை வீடியோ காலில் பார்த்த பின்பு ஆரோக்கியலியோவுக்கு ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்து கொண்டார்.
உடனே மனைவிக்கு கூட தெரியாமல் சிங்கப்பூரில் இருந்து கிளம்பி ஊருக்கு வந்தார். வந்து பார்த்தவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி அவர் திருமண த்தின் போது அணிந்து இருந்த நகைகள் அவர் அனுப்பிய பணம் எதுவும் வினிதாவிடம் இல்லை. வினிதாவை உடனே அங்கிருந்து அவரது அம்மா வீட்டுக்கு அழைத்து சென்று உங்கள் மகளிடம் Tik Tok பதிவு செய்ய கூடாது என்று சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார். நீங்கள் திருமணம் செய்த போது போட்ட நகைகள் நான் அனுப்பிய பணம் எதுவும் அவரிடம் இல்லை நீங்களே விசாரியுங்கள் என்று வினிதாவின் தாயாரிடம் கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார் ஆரோக்கியலியோ. வினிதாவின் தாயார் வெளியே சென்று இருந்து போது வினிதாவின் அக்கா புனிதாவின் 25 சவரன் நகைகளை எடுத்து கொண்டு வினிதா வீட்டை விட்டு வெளியே ஓடியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆரோக்கியலியோ வினிதாவின் தாயார் அருள் ஜெயராணியுடன் சென்று திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தி புகார் அளித்து விட்டு தனது மனைவியை காவல்துறையினர் மீட்டு தருவார்கள் என்று காவல் நிலையத்தில் காத்துள்ளார். Tik Tok தனது மகளின் வாழ்கையை கேள்வி குறியாக்கி விட்டதாக கலங்கி நிற்கிறார் Tik Tok பெண் வினிதாவின் தாயார். கட்டிய கணவனை விட்டு விட்டு டிக் டாக்கில் பழக்கமான உயிர்தோழியுடன் பெண் ஓட்டம் பிடித்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.