ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தோல், கைவினைப் பொருட்கள் விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் தோல், கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
கொரோனா முழு ஊரடங்கில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், ஊரடங்கால் நலிவுற்று தொழிலை மீட்டெடுக்க தங்கள் தொழிலுக்கும் அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கவும் அரசு முன் வர வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர்.