புயல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக தஞ்சையில் 31 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர், இலை கருகல் நோய் தாக்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை போதிய அளவு பெய்ததால், இந்த ஆண்டு காவிரியில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி முழு அளவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கஜா புயல் காரணமாக தஞ்சை,நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்தன.
இந்த நிலையில், புயல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக தஞ்சையில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை இலை கருகல் நோய் அதிகளவில் தாக்கியுள்ளது. அறுவடைக்கு தயாராகும் நிலையில், இலை கருகல் நோயால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.