சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற தலைமைப் பண்பு குறித்த பயிற்சி முகாமில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
நாட்டுநலப் பணி திட்டத்தின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சந்திரசேகர் ஐ.ஏ.எஸ் ஆகியோர் பங்கேற்று தலைமை பண்பு குறித்து சிறப்புரையாற்றினர். நாட்டு நலப்பணியில் சிறப்பாக பணியாற்றிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய பாஸ்கரன் இளைஞர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவினால் இந்தியா விரைவில் வல்லரசாகும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சந்திரசேகர், நல்ல பண்புகள் இருப்பவரே நல்ல தலைவனாக இருக்க முடியும் என்றும் அமைதியும், வலிமையும் தான் தலைமை பண்புக்குரிய குணங்கள் என்றும் தெரிவித்தார்.