முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு முன்பு வான் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
அசாம் மாநிலத்திற்கு 1977ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதமரான மொரார்ஜி தேசாய் சிறப்பு விமானத்தில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.
ஆனால் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார். ராஜஸ்தானின் முதலமைச்சராக இருந்த அசோக் கெலாட் 2001ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் சிக்கி உயிர் தப்பினார்.
2004ம் ஆண்டு தெற்கு குஜராத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர் அகமது படேல், பிரித்விராஜ் சவ்கான், குமார் செல்ஜா ஆகியோர் பயணித்த விமானத்தில் சிக்கியதில் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர்.
2006ம் ஆண்டு பஞ்சாப் முன்னாள் முதலமைச்சராக இருந்த அம்ரீந்தர் சிங்கும், 2010ம் ஆண்டில் பாஜகவின் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங்கும், துணைத் தலைவரான முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் உத்தர பிரதேசத்துக்கு பயணித்த போது நூலிழையில் உயிர் பிழைத்தனர்.