மீலாது நபி பெருநாளையொட்டிக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இஸ்லாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், முகமது நபி பிறந்த நாளையொட்டி இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். உலக சகோதரத்துவம், இரக்கம் ஆகிய அவரது போதனைகள் பிறர் நலனுக்குப் பாடுபட நமக்கு வழிகாட்டியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், முகமது நபியின் போதனைகளால் சமூகத்தில் நல்லிணக்கமும், இரக்கமும் நிலவும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் உலகெங்கும் அமைதி நிலவட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.