தலைமை செயலகத்தில் தலைவர்களின் பேனர்கள் அகற்றம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, தலைமை செயலகத்தில் அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த அரசு விழா புகைப்படங்கள், மறைந்த முதலமைச்சர்கள், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பேனர்கள் அகற்றப்பட்டன. இதனை தொடர்ந்த வாக்களிப்பதன் அவசியம் குறித்த பதாகைகள் , விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version