முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் கைது ஆவார் – தேசியச் செயலாளர் எச். ராஜா

இன்னும் சில நாட்களில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் கைதாவார் எனவும், அவர் காங்கிரஸ்காரராகக் கூட இருக்கலாம் எனவும் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திமுக எதிர்மறை எதிர்க் கட்சியாக இருப்பதால்தான் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகத் தெரிவித்தார். நேசனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவும் ராகுலும் கைதாவது உறுதி எனவும், ஊழலின் ஊற்றுக்கண் காங்கிரஸ் எனவும் தெரிவித்தார். 

Exit mobile version