இணையத்தை கலக்கும் சோம்பேறி சீன குதிரை

சீனாவைச் சேர்ந்த ஒரு சோம்பேறிக் குதிரை ஒன்று இணையத்தையே கலக்கி வருகிறது. கடந்த சில தினங்களில் இந்தக் குதிரையின் வீடியோவை மக்கள் 2 கோடிக்கும் அதிகமானமுறைகள் பார்த்து உள்ளனர். 

சில உயிரினங்கள் தந்திரம் மிக்கவை, நடிக்கக் கூடியவை. நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் மனிதர்களை ஏமாற்ற அவ்வப்போது நடிப்பதுண்டு. ஆனால் குதிரைகள் பொதுவாக அப்படி நடிப்பது இல்லை. ஆனால், சீன குதிரை இதற்கு விதிவிலக்காக உள்ளது.தன் மீது ஏறி யாராவது சவாரி செய்ய முயன்றால், உடனே மயக்கம் வந்தது போல தரையில் திடீரென விழுந்து, இறந்து விட்டதுபோல நாக்கை வெளியே தள்ளி நடிக்கிறது ஒரு சோம்பேறிக் குதிரை. சவாரி செய்ய வந்தவர் திரும்பிப் போன பின்னர் அது மீண்டும் எழுந்து கொள்கிறது. சில சமயங்களில் இது மனிதர்கள் தொட்ட உடனேயே தரையில் விழுந்து நடிக்கத் தொடங்கிவிடுகிறது.

இந்தக் குதிரை சீனாவில் உள்ள ஜிங்ஜாங் என்ற ஊரில் உள்ளது, அந்த ஊரின் பெயராலேயே இது ஜிங்ஜாங் குதிரை என்று மக்களால் அழைக்கப்படுகின்றது. தனது சுட்டித் தனமான நடிப்பினால் உள்ளூரில் கவனம் ஈர்த்த, இந்த நடிப்புக்கார ஜிங்ஜாங் குதிரை இப்போது இணையத்தில் பிரபலமாகிவருகிறது.

Exit mobile version