ஒரே நேரத்தில் பல ராக்கெட்டுகளை ஏவக்கூடிய லாஞ்சரை வட கொரியா வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சர்வதேச எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை அடிக்கடி நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் முன்னிலையில், ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை செலுத்தும் மிக பெரிய லாஞ்சரான ”சூப்பர் லார்ஜ் மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர்” பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இது குறித்து கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த புதிய மேம்பட்ட சாதனம் ஒரு மிக பெரிய ஆயுதம் ஆக திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிரி நாட்டு படைகளால் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற ராணுவ அச்சுறுத்தல் மற்றும் ஆதிக்க அழுத்தங்களை தயக்கமின்றி தடுக்கின்ற வகையில், ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர வேண்டிய தேவை நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது என கிம் கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.