அரசு மாணவர்களின் நேர்மையை ஊக்கப்படுத்த துவக்கப்பட்ட அங்காடி

ஈரோட்டில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் நேர்மையை ஊக்கப்படுத்தும் விதமாக அங்காடி துவக்கப்பட்டுள்ளது, மாணவ மாணவியர் இடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ஈரோடு எஸ்.கே.சி. சாலையில் மாநகராட்சி நடுநிலை பள்ளி செயல்படுகிறது. பள்ளி மாணவ,மாணவிகள் நேர்மையை பாடமாக மட்டுமே கற்காமல் அதனை வாழ்க்கையில் கடைபிடிக்கும் வகையில், இப்பள்ளியில் நேர்மை அங்காடி துவக்கப்பட்டுள்ளது.  தனியார் மூலம் நன்கொடைகள் பெற்று பீரோ வாங்கப்பட்டு அதில் பென்சில், பேனா, ரப்பர், பேப்பர், நோட்டு, ஸ்கேல், பேனாக்கள் உள்ளிட்ட அனைத்தும் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான விலையும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. பீரோவில் உள்ள உண்டியலில் தங்களுக்கு தேவையான பொருட்களுக்கு உரிய தொகையை போட்டு விட்டு பொருளை எடுத்து கொள்ள மாணவ மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர்மை அங்காடியை பயன்படுத்துவதன் மூலம் மாணவ, மாணவிகள் கருத்தாக மட்டுமின்றி பயிற்சியாகவும் நேர்மையை கற்று கொள்வர் என இந்த முன்மாதிரி பள்ளியின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version