நாணயங்களை தொட்டு உணர்வதில் ஏற்பட்டு வந்த சிரமங்களை போக்கும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நாணயங்களை பிரதமர் மோடி வெளியிட்டார். டெல்லியில் பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய நாணயங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பழைய நாணயங்கள் ஒரே அளவில் அச்சடிக்கப்பட்டு இருந்ததால், மாற்றுத்திறனாளிகள் அதனை தொட்டுப் பார்த்து கண்டறிவதில் சில சிரமங்கள் இருந்து வந்தன. இந்நிலையில் இதனை போக்கும் வகையில் இந்த நாணயங்களை மாற்றுத்திறனாளிகள் தொட்டுப் பார்த்து எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.