மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலை மற்றும் படங்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க-வினர் பல்வேறு வகையில் மரியாதை செலுத்துகின்றனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காலை 9 மணிக்கு அவரது இல்லத்தில், எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதுபோல், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது இல்லத்தில், எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு, 10 மணிக்கு அ.தி.மு.க அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார். பின்னர், கிண்டி எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமவரம் தோட்டத்துக்குச் செல்லும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குகிறார்.