மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் புதிய படப்பிடிப்புத் தளம்

காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் அமைக்கப்படவுள்ள படப்பிடிப்பு தளத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

பையனூரில் கடந்த ஆண்டு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயரில் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பில் படப்பிடிப்பு அரங்கம் அமைக்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில், 5 கோடி ரூபாய் மதிப்பில் வெளிப்புற படப்பிடிப்புத் தளம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் அரங்கத்தின் கட்டுமான பணிகளை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பையனூரில் நடைபெற்ற பூமி பூஜையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னணி நடிகர்கள் மற்றும் பல்வேறு திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version