முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் 387 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே, முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்ததால், காவிரியாற்றில் நீர் வரத்து 2 லட்சம் கனஅடியை எட்டியது. அப்போது, முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 45 மதகுகளைக் கொண்ட பாலத்தில், 9 மதகுகள் இடிந்து விழுந்தது.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 24 ந்தேதி முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு புதிய பாலம் கட்டப்படும் என அறிவித்தார். அதன்படி 387 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, புதிய கதவணை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.