கடந்த ஆண்டு இயல்பை விட 2 சதவீதம் கூடுதல் மழை கிடைத்துள்ளது -வானிலை துறையின் தலைவர் பாலசந்திரன்

கடந்த ஆண்டு இயல்பை விட இரண்டு சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக தென்மண்டல வானிலைத் துறையின் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

பருவக்காற்று – 2019 என்கிற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நுங்கம்பாக்கத்தில் உள்ள  சென்னை வானிலை ஆய்வு மையத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தென் மண்டல வானிலை துறையின் தலைவர் பாலச்சந்திரன், தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும்  நதிகள் மறுசீரமைப்பு கழக மேலாண் இயக்குனர் சத்யகோபால் ஐஏஎஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் 2019 ம் ஆண்டு பருவமழை குறித்து விரிவாக பேசப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலசந்திரன், தமிழகத்தில் தற்போது இயல்பை ஓட்டியே வெயில் அடித்து வருவதாகவும், கோடைக்கால வெயில் அளவு குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் எனக் கூறினார்.

Exit mobile version