கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஜாடி போன்ற மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல்துறை சார்பில் சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொற்கை, கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் 7-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகின்றன.
அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் பானைகள், தங்க ஆபரணம் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, தற்போது 348 செண்டி மீட்டர் ஆழத்தில், சிவப்பு நிற ஜாடி வடிவ மண் பாண்டம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கலன், தானியம் சேமிக்கப் பயன்பட்டிருக்கலாம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
கழுத்துப்பகுதி இல்லாமல், வாய்ப்பகுதி சற்றே உட்புறம் மடிந்த நிலையில், 30 செண்டி மீட்டர் சுற்றளவுடன் உள்ள அந்த மண்பாண்டத்தின் மையப்பகுதியில் கயிறு போன்று வடிவமைப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.