பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி ஆலையில் பெரும் தீ விபத்து!

சென்னை மாதவரத்தில், பழைய பிளாஸ்டிக் பொருட்கள் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு திடீரென புகை நாற்றம் வந்ததையடுத்து, பணியில் இருந்த 8 தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இதைத் தொடர்ந்து தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. பின்னர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கம்பி உரசியதில் ஏற்பட்ட தீ பொறி, அடுக்கி வைக்கபட்டிருந்த பிளாஸ்டிக் மூட்டைகள் மீது விழுந்ததால், இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மாதவரம் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version