கொடைக்கானல் மலைச்சாலையில் பெருமாள் மலை அருகே சாலையின் தடுப்பு சுவர் இடிந்து பலவீனமாக உள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
கஜா புயல் காரணமாக கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதும் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு கடந்த 16-ம் தேதி போக்குவரத்து முடங்கியது.
இந்தநிலையில், நேற்று மதியம் சாலையின் குறுக்கே விழுந்த மரங்கள் மற்றும் மண் சரிவுகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை ஊழியர்கள் உதவியுடன் அகற்றப்பட்டு நேற்று மதியம் முதல் போக்குவரத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில். நேற்று மாலை கொடைக்கானல் வத்தலகுண்டு சாலையில் பெருமாள் மலை அருகே சாலையின் ஓரத்தில் உள்ள சுவரில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு சாலையின் அளவு குறைந்து பலவீனமாக உள்ளது. இதனால், கனரக வாகனங்கள் இரண்டு நாட்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.