நில அபகரிப்பு வழக்கு – ஜெகத்ரட்சகன் மீதான பிடியை இறுக்கும் சிபிசிஐடி!

கடந்த 1995ஆம் ஆண்டில் குரோம் தோல் தொழிற்சாலை தலைவராக இருந்த, தற்போதைய அரக்கோணம் திமுக எம்.பி-யான ஜெகத்ரட்சகன், 1 புள்ளி 5 ஏக்கர் நிலத்தை சட்ட விதிமுறைகளை மீறி 41 பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை விரைந்து விசாரிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, நில அபகரிப்பு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜெகத்ரட்சகன் மீது புகார் அளித்த குவிட்டன்தாசன் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை சம்ர்ப்பித்தார்.

அதன் அடிப்படையில் ஜெகத்ரட்சகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை சிபிசிஐடியினர் தயார் செய்து வருகின்றனர். ஜனவரி 5ம் தேதி வரை கைது நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதன் பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜெகத்ரட்சகனின் நில அபகரிப்பு வழக்கு சூடு பிடித்துள்ளது.

Exit mobile version