தமிழகத்தின் சிறந்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனமாக கோயம்புத்தூர் லமிக்கா கல்வி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசின் ஊரக மேம்பாட்டுத் துறை சார்பாக கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் துவங்கப்பட்டது. இதன் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்படுத்துவதற்காக பல்வேறு சிறப்பு சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்களுக்கு பணி நியமனம் ஆணை மற்றும் சிறந்த முறையில் செயல்படும் பயிற்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை சான்றிதழ் வழங்கப்பட்டது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் தமிழகத்தில் நடத்தப்படும் திறன் பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை, சிறப்பான கட்டமைப்பு, சிறந்த முறையில் பயிற்சி வழங்குதல், கல்வி நிறுவனத்தில் பயின்ற அனைத்து மாணவர்களையும் பணியில் அமர்த்துவது உள்ளிட்ட சிறப்பான செயல்படுகளுக்காக கோயம்புத்தூர் லமிக்கா கல்வி நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.