லலிதா ஜுவல்லரியில் திருடு போன 11 கிலோ நகைகள் மீட்பு

திருச்சியில், கர்நாடகக் காவல்துறையினர் கைப்பற்றிய 11 கிலோ நகைகள் லலிதா ஜுவல்லரியில் களவுபோன நகைகள் என்பது உறுதியாகியுள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக முருகனிடம் அம்மாநிலக் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து திருச்சியில் முருகன் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த கர்நாடகக் காவல்துறையினர் நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகளைக் கைப்பற்றினர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி தனிப்படை காவல்துறையினர் கர்நாடகக் காவல்துறையினரைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் எளம்பூர் பகுதியில் கர்நாடகக் காவல்துறையினரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், கைப்பற்றப்பட்ட நகைகள் லலிதா ஜுவல்லரியின் நகைகள் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நகைகளை ஒப்படைப்பது தொடர்பாகத் தமிழக கர்நாடகக் காவல்துறையினரிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Exit mobile version