வெண்டைக்காய் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைப்பதால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வெண்டை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் காவேரிப்பட்டினம், ஜெகதாப், ராயக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விதை விதைத்த 60 நாட்களில் வெண்டைக்காய் விளைச்சலுக்கு தயாராகிறது. ஏக்கருக்கு 150 கிலோ வரை அறுவடை செய்யப்படும் வெண்டைக்காய் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அதிக வரத்து காரணமாக விலை குறைந்துள்ள போதிலும் போதுமான லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version