நாடாளுமன்ற தேர்தலில் கிரீஸ் நாட்டில் எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிரதமராக பதவி ஏற்றார்.
கிரீஸ் நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் அலெக்சிஸ் திசிப்ராஸ் தலைமையிலான இடதுசாரி சிரிசா கட்சியின் ஆட்சி நடைபெற்றது. அதன் ஆட்சிக்காலம் முடிந்ததால், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 300 தொகுதிகளில், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 158 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆளும் கட்சிக்கு சுமார் 86 இடங்கள் மட்டுமே பிடித்து தோல்வியை சந்தித்தது. இதையடுத்து அலெக்சிஸ் திசிப்ராஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஏதன்ஸ் நகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.