தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையால் குற்றாலத்தில் பிளாஸ்டிக் இல்லாத சுற்றுலா தலமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் தமிழக அரசிற்கு நன்றியையும், பாரட்டும் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்பொதிகை சாரல் விழும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம். இதன் அழகை ரசித்து செல்ல பல்வேறு மாவட்டங்களிலுருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம், இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் அதிக வருகையின் காரணமாக அவர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகமாக காணப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது தமிழக அரசின் பிளாஸ்டிக் பொருட்களின் தடையால் இந்த பகுதியில் பிளாஸ்டிக் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு சுகாதாரமான சுற்றுலா தளமாக மாறி வருவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.