குஷ்பூவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!

இது எங்களுடைய கோட்டை’ என கொக்கரித்துக் கொண்டிருந்த திமுகவிற்கு சரியான போட்டியாக ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார் பாஜக வேட்பாளர் குஷ்பூ. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் குஷ்பூ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

அவங்க என்னப்பா சினிமா நடிகை, அதுவும் உச்ச நட்சத்திரம்… அப்படிப்பட்டவங்க வர்றாங்கன்னு சொன்னால் கூட்டம் குவியத் தானே செய்யும் என  விமர்சனம் செய்பவர்கள் ஏராளம். ஆனால் சினிமாவிலும், அரசியலிலும் தனக்கு இருக்கும் பிரபலத்தை வைத்துக் கொண்டு கேரவனில் ஏறி நின்று பிரச்சாரம் செய்யாமல், ஆயிரம் விளக்கு தொகுதி மக்களை தன்னுடைய சொந்தமாக நினைத்து வீடு, வீடாக சென்று தனிப்பட்ட முறையில் வாக்கு சேகரித்து வருகிறார். ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள 85 சதவீத பகுதிகளுக்கு குஷ்பூ நடந்து சென்று தான் வாக்கு சேகரித்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. ஆம் பிரச்சார வாகனமோ, ஜீப்போ செல்ல முடியாத குறுகலான தெருக்களில் கூட குஷ்பூ நடந்து சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

நடந்து சென்று பிரசாரம் செய்வது வெறும் ஓட்டு வேட்டையாக மட்டும் பார்ப்பவர்கள் மத்தியில், மக்களை சந்திக்கவும், அவர்களுடைய குறைகளை கேட்டறியவும் கிடைத்த ஒரு நல் வாய்ப்பாக குஷ்பூ பயன்படுத்தி வருவது, ஆயிரம் விளக்கு தொகுதி மக்களை அவரை நோக்கி ஈர்க்க வைத்துள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் வாக்கு சேகரிக்க செல்லும் குஷ்பூவிற்கு திரளான இஸ்லாமியர்களும், பெண்களும் தடபுடலாக வரவேற்பு கொடுத்து வருவது அரசியல் வட்டாரங்களில் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதன் முறையாக தேர்தலில் போட்டியிடும் ஒரு பெண் வேட்பாளருக்கு மக்களிடம் இப்படியொரு வரவேற்பா? என மலைக்க வைத்துள்ளது. திமுகவின் கோட்டையில் வெற்றி வாகை சூடிவிடலாம் என நினைத்த மருத்துவர் எழிலனின் பகல் கனவும், முதல்வரின் தாயார் பற்றிய ஆ.ராசாவின் அருவறுக்கத்தக்க பேச்சால் சுக்கு நூறாகிப் போனது. அதனால் ஆயிரம் விளக்கில் பிரச்சாரத்திற்காக தலைகாட்டுவதை சற்றே குறைத்துக் கொண்டார் மருத்துவர் எழிலன். ஆனால் குஷ்பூவையோ மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பதை பார்க்கும் போதும், ஆயிரம் விளக்கில்  வெற்றி வாகை சூடுவார். 

Exit mobile version