ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பெய்யும் கன மழையால், மஹானந்தி கோயில் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
கர்னூல் மாவட்டத்தில், திங்கள் இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், கர்னூல் மாவட்டத்தில் உள்ள குண்டு நதி வெள்ள நீரால் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில், பிரசித்தி பெற்ற மகாநந்தீஸ்வரர் கோயிலானது வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. கோயிலின் உள்ளே அதிக அளவில் வெள்ள நீர் புகுந்ததால், பக்தர்கள் அவதியடைந்தனர். இதை அடுத்து தரிசனங்களை ரத்து செய்த கோயில் நிர்வாகம், நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கோயிலினுள், இவ்வாறு நீர் சூழ்ந்துள்ளது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.