நீதித்துறையும், ஊடகமும் அமைதியானால் நிறைய பிரச்சினைகள் உருவாகும் –  உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப்

நீதித்துறையும், ஊடகமும் கண்மூடி இருந்துவிட்டால், நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 1953 ஆம் ஆண்டு பிறந்த இவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக சிறப்பாக செயலாற்றிய பெருமைக்குரியவர். தமது பதவிக் காலத்தில் தீவிரவாதி அப்சல் குரு தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்புகளை வழங்கினார்.

நாட்டில் பெரிதும் பேசப்பட்ட நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் நீதிபதிகள் லோதா, நாரிமன் ஆகியோருடன் இணைந்து வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டவர் இந்தக் குரியன் ஜோசப். இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

அப்போது, செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், மிகுந்த மதிப்பு, நேசிப்பு, அர்ப்பணிப்பு, உண்மை ஆகியவற்றுடன் தமது பணியை செய்ததாகவும், உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

 

Exit mobile version