மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் குறிஞ்சி மலர்கள் சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது. பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய குறிஞ்சி பூ, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் பூத்து குலுங்கியது.
இதை வரவேற்கும் விதத்தில், குறிஞ்சி மலரை அரசு விழாவாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் குறிஞ்சி விழா கொண்டாடப்பட்டது.
இதனைதொடர்ந்து, குறிஞ்சி மலர்களை லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் பார்த்து சென்றனர். இந்நிலையில்,குறிஞ்சி மலர் சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது. குறிஞ்சி மலர்களை பார்க்க இன்னும் 12 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.