கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோயிலில் முருகப்பெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற வித்தியாசமான குறவர் படுகளம் நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தக்கலை அருகே வேளிமலை குமாரகோயிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது. மற்ற கோயில்களில் இல்லாத வகையில், வித்தியாசமான குறவர் படுகளம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இங்குள்ள மலையிலிருந்து வள்ளியுடன் முதியவர் வேடத்தில் முருகப் பெருமான் கோயிலை நோக்கி செல்லும்போது, வள்ளியின் உறவினர்களான குறவர்கள் முருகனை தடுப்பதும், அவர்களுடன் சண்டையிட்டு வெற்றி பெற்று இறுதியில் தனது உண்மை வடிவத்தை வெளிக்காட்டும் நிகழ்வும் நடத்தி காண்பிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.