தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி – பார்வையாளர்களை கவர்ந்த சோழர் கால நாணயங்கள்

சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியில், தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த சோழர் மற்றும் சேரர் காலத்து நாணயங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

குன்றத்தூர் மணிகண்ட நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தி ஸ்பார்க் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. வேளாங்கண்ணி கல்வி குழுமத்தின் தலைவர் சந்தனமுத்து தலைமையில் நடைபெற்ற கண்காட்சியை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தின் இயக்குனர் சுந்தரராஜபெருமாள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கண்காட்சியில் அறிவியல், சமூக அறிவியல், கணிதம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிணி துறைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை காட்சி படுத்தினர். இதில் சமூக அறிவியல் துறை சார்பில் கற்காலம் முதல் தற்போது வரை உள்ள நாணயங்களை மாணவர்கள் காட்சி படுத்தினர். இதில் சேரர் மற்றும்  சோழர் காலத்து நாணயங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

 

 

 

Exit mobile version