'கறுப்பர் கூட்டம்' நிர்வாகி செந்தில்வாசன் மீதும் குண்டாஸ் பாய்ந்தது!

கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய வழக்கில் கைதான கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில்வாசனையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசி பதிவிட்டது தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில்வாசன், சுரேந்திரன், குகன், சோமசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். செந்தில்வாசனை 4 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்த போது, அவர் ஏற்கனவே திமுக ஐ.டி.விங்கில் பணியாற்றிவர் என்பது அம்பலமானது. இந்த வழக்கில் கைதான சுரேந்திரனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகி செந்தில்வாசனையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் செந்தில்வாசனுக்கும், சுரேந்திரனுக்கு ஒராண்டு சிறைவாசம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version