நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் நன்செய் இடையாறு ராஜாசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. வரும் 10 ஆம் தேதி கும்பாபிஷேகவிழா நடைபெறவுள்ளதையொட்டி இன்று காலை பக்தர்கள் காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடினர். பின்னர் மேள தாளங்கள் முழங்க தீர்த்தங்களை எடுத்து வந்தனர். தொடர்ந்து நாளை இரண்டாம் கட்டமாக இக பரம் வழங்கும் நிகழ்ச்சியும் மாலையில் கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
சனிக்கிழமை ஐந்தாம் கால யாக வேள்வியும் ஞாயிற்றுக்கிழமை புதிய தோரண வாயிலுக்கு கும்பாபிஷேக விழாவும் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதால் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பரமத்திவேலூர் போலீசார் செய்து வருகின்றனர்.