உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்துவரும் கும்பமேளாவில் மக பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் துவங்கி கும்பமேளா நடைபெற்று வருகிறது. கும்பமேளாவையொட்டி நாடு முழுவதிலும் உள்ள ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜில் தினந்தோறும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெளிநாட்டு பக்தர்களும் அதிகளவில் கும்பமேளாவில் கலந்து கொள்கின்றனர். கும்பமேளா அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடியவுள்ளது.
இந்நிலையில் இன்று மக பூர்ணிமாவையொட்டி கும்பமேளா நடைபெறும் சங்கம் கட் பகுதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கங்கையில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்யவுள்ளனர். இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.