கும்பமேளா ரத்து? – மாநில அரசு ஆலோசனை!

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் கும்பமேளாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவும் நிலையில், நிகழ்ச்சியை ரத்து செய்வது பற்றி அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

ஹரித்துவாரில் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கங்கை நதியில் புனித நீராடுவது வழக்கம். இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் புனித நீராடிய நிலையில், கடந்த 5 நாட்களில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டது.

இதனால் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கிய உத்தரகண்ட அரசு, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலேயே பக்தர்களை நிறுத்தி கொரோனா நெகடிவ் சான்று இருந்தால் மட்டுமே கும்பமேளாவில் பங்கேற்க அனுமதித்து வருகிறது. இதேபோல், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும், கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் கும்பமேளா நிகழ்ச்சியையே முன்கூட்டியே நிறுத்துவது உத்தரகண்ட் அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version