கோலாகலமாக நடக்கும் கும்ப மேளா திருவிழா

உத்தரப்பிரதேசத்தில், நடைபெற்று வரும் புகழ்பெற்ற கும்ப மேளா திருவிழாவில், ஏராளமானோர் புனித நீராடி வருகின்றனர்.

மிகப்பெரிய கலாச்சார நிகழ்வாக கருதப்படும் கும்ப மேளா, பிரயாக்ராஜ் என்று பெயர் மாற்றப்பட்ட அலகாபாத்தில் கடந்த 15 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. கங்கை, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் அந்த இடத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் புனித நீராடி வருகின்றனர். அதிகாலையில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீராடி வழிபட்டனர். குடும்பத்துடன் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. தொடர்ந்து 48 நாட்களில் நடைபெறும் திருவிழாவில் பத்து கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version