உத்தர பிரதேசத்தில் இன்று முதல் நடைபெறும் கும்பமேளாவில் லட்சக் கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் இன்று கும்பமேளா துவங்குகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இவ்விழாவில் கலந்துகொள்ள உலகமிருந்தும் ஆயிரக்கணக்கான சாதுக்கள் பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்துள்ளனர். இந்த கும்பமேளாவில் கங்கை, யமுனை, மற்றும் சரஸ்வதி ஆகிய 3 நதிகள் இக்காலகட்டத்தில் சங்கமிப்பதாக நம்பப்படுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், இந்த திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளனர். இந்த கும்பமேளா நிகழ்வானது இன்று துவங்கி, மார்ச் 4ஆம் தேதி வரை, நடைபெறுகிறது. இதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரயிருப்பதால் மத்திய, மாநில அரசுகள் 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பணிகளை செய்துள்ளனர்.