கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் சன்மானம்

கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் 6 குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவருக்கு தலா 1 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில், கடந்த பிப்ரவரி மாதம் ராமலிங்கம் என்பவர் மத மாற்றத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை காவல்துறையினர் நடத்தி வந்த நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு தன்வசம் எடுத்துக் கொண்டது. இவ்வழக்கில் ஏற்கனவே காவல்துறையினரால் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 6 பேர் தேடப்படும் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் குற்றவாளிகள் குறித்து, துப்பு கொடுப்பவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Exit mobile version