கும்பகோணம் ரயில் நிலையத்தில் 2 மற்றும் 3ம் நடைமேடைகள் விரிவாக்கப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் கோயில் நகரமான கும்பகோணத்திற்கு நாள்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் 2-ஆவது மற்றும் 3-ஆவது நடைமேடை மிகவும் சிறியதாக இருப்பதால் விரைவு ரயிலில் இருந்து, பயணிகள் இறங்குவதற்கு சிரமப்படுகின்றனர்.
எனவே நடைமேடைகளில் விரிவாக்கம் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி ரயில்வே நிலைய மேலாளருக்கு இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.