கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம், பெரியகுளத்திலுள்ள கும்பகரை அருவியில் நீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Exit mobile version