கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடும் சேதம் – விரைவில் சீரமைக்கப்படும் என வனத்துறை தகவல்

கும்பக்கரை அருவியில் கஜா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கைப்பிடிகள் மற்றும் தடுப்புச்சுவர்கள் உடைந்து சேதமானது.

கஜா புயல் காரணமாக தேனி மாவட்டத்திலும் பரவலாக கன மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை
பகுதியில் பெய்த மழை காரணமாக கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.

வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர்கள் மற்றும் கம்பி வேலிகள், படிக்கட்டுகள் போன்றவை முழுவதுமாக சேதமடைந்தது. காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரத்தடிகள் தடுப்பு கம்பிகளில் சிக்கி கிடக்கின்றன.

வெள்ளப்பெருக்கு காரணமாக மராமத்து பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Exit mobile version