மாநிலப் பிரிவினையின் போது கேரளாவிடம் செல்ல இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தினை தன் போராட்டத்தின் மூலம் தமிழகத்திற்கே மீட்டெடுத்தவர் மார்ஷல் நேசமணி. அவரது பிறந்தநாளான இன்று அவரின் நினைவைப் போற்றி கழகத்தின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.
கொடிய சாதிய தீண்டாமையை எதிர்த்து, மாநில உரிமையை போராடி மீட்டெடுத்து, குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க அரும்பாடுபட்ட தென் எல்லை காவலர் என்று போற்றப்படும் “குமரித்தந்தை” ஐயா மார்சல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் அவரின் புகழையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
கொடிய சாதிய தீண்டாமையை எதிர்த்து, மாநில உரிமையை போராடி மீட்டெடுத்து, குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க அரும்பாடுபட்ட தென் எல்லை காவலர் என்று போற்றப்படும் “குமரித்தந்தை” ஐயா மார்சல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் அவரின் புகழையும், தியாகத்தையும் போற்றி… pic.twitter.com/LHvwNzJ15E
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) June 12, 2023