வெப்பசலனம் காரணமாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், வெப்பசலனம் காரணமாக கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குமரியில் கடந்த வாரங்களில் கடுமையான வெயில் வாட்டிவந்தது. இதனால் அம்மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், வெப்பசலனம் காரணமாக கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர பகுதிகளான கோதையாறு, பேச்சிப்பாறை, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி சிற்றாறு, பேச்சிப்பாறை உள்ளிட்ட இடங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. கனமழையால் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version