குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவில் இறுதிநாளான இன்று மகிசாசூரசம்ஹாரம் நடைபெறுவதால், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
மைசூருக்கு அடுத்தபடியாக விளங்கும் குலசேகபட்டினம் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குலசேகபட்டினம் தசரா திருவிழா, கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மகிசாசூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலத்திலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளன. சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதியில் மின்விளக்குகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பக்தர்களின் வசதிக்காக திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.