கேடிஎம் நிறுவனத்தில் இருந்து புதிய 390 அட்வென்ஜெர் பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கேடிஎம் நிறுவனம் 390 அட்வென்ஜெர் பைக்கை அறிமுகப்படுத்துவதின் மூலம் இந்தியாவிலும் அட்வென்ஜெர் பைக் பிரிவில் இந்நிறுவனம் நுழைந்துள்ளது. கேடிஎம் 390 அட்வென்ஜெர் குறிப்பிட்ட அட்வென்ஜெர் வகை பயணத்திற்கென ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட ஒரு பைக்காகும்.
நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்கள் கேடிஎம் அட்வென்ஜெர் 390 பைக்கிற்கான முன்பதிவுகளை ரூ.10,000ல் இருந்து துவங்கியுள்ளனர். இந்த அட்வென்ஜெர் பைக்கின் டெலிவிரிகள் அடுத்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பைக்கில் மிகவும் எடை குறைந்த Trellis chassis, தொலைத்தூர பயணத்திற்கு ஏற்ப முன்புறத்தில் 170mm Suspension, பின்புறத்தில் 177mm mono shock absorber உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.