கேஎஸ் அழகிரி, மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமான சந்திப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கேஎஸ் அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து திருநாவுரகரசர் நீக்கப்பட்டார். இதையடுத்து, புதிய தலைவராக தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார்.

இந்தநிலையில், தமிழகத்தில் காங்கிரசின் தோழமை கட்சியான திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.

Exit mobile version