இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைக் கட்டியுள்ளன.
கிருஷ்ண பிரான் பிறந்த அஷ்டமி நாள் கோகுலாஷ்டமி என்கிற பெயரில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் தேய் பிறையின் எட்டாம் நாளான இன்று, கிருஷ்ண ஜெயந்தி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளில் பல வண்ணங்களில் கிருஷ்ணர் சிலை மற்றும் படங்களை அலங்கரித்து, கிருஷ்ணர் விரும்பி உண்ணும் வெண்ணெய்யை படைத்து மக்கள் வழிபாடு செய்தனர். அப்போது, கிருஷ்ண பகவான் குழந்தை அவதாரமாக வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பார் என நம்பப்படுகிறது. மேலும், வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ண பகவான் போல் அலங்கரித்து மக்கள் மகிழ்வது இந்த பண்டிகையில் சிறப்பு அம்சமாகும்.