வட மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணன் பிறந்த இடமான மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள் அனைவரும் கிருஷ்ணர் போல் வேடமணிந்து வலம் வந்தது காண்போரை கவர்ந்தது. சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜம்முவில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு நீடித்து வரும் நிலையில், கிருஷ்ண ஜெயந்தி விழாவினை அங்குள்ள மக்கள் கோலகலமாக கொண்டாடினர். இதில் இந்து கடவுளின் வேடமணிந்த சிறுவர், சிறுமியர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோன்று, பிரான்ஸ் தலைநகரான பாரீசிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.